ராமேஸ்வரம் கோயிலில் வரிசையில் நின்றிருந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

3 hours ago 3

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வரிசையில் நின்றிருந்த ராஜஸ்தானை சேர்ந்த ராஜ்தாஸ் என்ற பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உலக பிரசித்தி பெற்றது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருகோயில். இந்த கோயிலுக்கு தின்தோறும் தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை ராஜஸ்தானை சேர்ந்த ராஜ்தாஸ் என்பவர் ராமநாத சுவாமியை தரிசனம் செய்வதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது கூட்ட நெரிசல் காரணமாக அவர் மயங்கி விழுந்தார். இதனால் அவரின் அருகில் உள்ளவர்கள் அவரை தூக்கி வந்து கோயிலில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வர அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்ட நெரிசலில் பக்தர் உயிரிழந்தது ராமேஸ்வர பக்தர்கள் மத்தியில் வேதனையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The post ராமேஸ்வரம் கோயிலில் வரிசையில் நின்றிருந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article