ராமேசுவரம் - தனுஷ்கோடி பகுதியில் அக்.28-ல் கடலோர கடற்படையினருக்கு பயிற்சி - மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

4 months ago 17

ராமேசுவரம்: ராமேசுவரம் - தனுஷ்கோடி கடற்பகுதியில் அக்டோபர் 28-ம் தேதி திங்கட்கிழமை கடலோர கடற்படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வதால் மீனவர்களுக்கு அந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை முகாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘அக்டோபர் 28 திங்கட்கிழமை காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி பாக் ஜலசந்தி கடற்பகுதியில் இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வதால் இந்த பகுதிக்குள் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article