ராமநாதபுரம்: மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன் ஆய்வு

3 months ago 17

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால், மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 41 செ.மீ மழை பதிவானது. தொடர் கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் . ராமநாதபுரம் நகர் தங்கப்பா நகர், பாத்திமா நகர், வசந்த நகர் மற்றும் பாம்பன், ராமே சுவரம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Read Entire Article