24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னை ரவுடியை ஆந்திராவில் வைத்து கைது செய்தது தனிப்படை போலீஸ்

3 hours ago 2

சென்னை: 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னை ரவுடியை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீஸ் கைது செய்தது. 2001 ஆம் ஆண்டு முதல் ரவுடி சேரா தலைமறைவாகி விட்டார்; போலீசார் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ரவுடி சேரா மீது ஆயுத தடைச் சட்டம், போதைப்பொருள் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடுங்கையூர், எம்கேபி நகர், ஆர்.கே.நகர், கடற்கரை போலீஸ், மாதவரம், செம்பியம் காவல் நிலையங்களில் ரவுடி சேரா மீது குற்ற வழக்குகள் உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பதுங்கி இருந்த ரவுடி சேராவை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைதான ரவுடி சேராவை தனிப்படை போலீசார் சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்த ரவுடி ராஜேந்திரன் என்ற சேரா, ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி. கூட்டாளிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டதை அடுத்து தற்போது ரவுடி சேரா கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவில் தங்கி வசதி படைத்தவர்களை மிரட்டி பணம் பறித்த குற்றங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சேரா மீது எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னை ரவுடியை ஆந்திராவில் வைத்து கைது செய்தது தனிப்படை போலீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article