ராமநாதபுரத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற 4 பேர் கைது

5 months ago 17
தங்கச்சிமடம் கடற்கரையிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்றதாக இலங்கை தமிழர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் கோகிலவாணி என்பவர், 2 ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடிக்கு அகதியாக வந்து, மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தபோது, சீட்டு நடத்தி மோசடி செய்துவிட்டு, தற்போது சசிகுமார் என்பவருடன் இலங்கைக்கு தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. மற்றொருவரான நாகராஜ் தனது நிலத்தை விற்கவும், சேகர் என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது உறவினரை பார்க்கவும் இலங்கைக்கு செல்ல முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article