ராமதாஸ் வேண்டுகோள் முந்திரி சாகுபடி செய்து வருபவர்களை அகற்றக்கூடாது

19 hours ago 2

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம் குடுக்கம்பாளையம், பெத்தாங்குப்பம், மலையடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முந்திரி சாகுபடி செய்து வாழ்ந்து வந்த நிலையில், அந்த நிலங்களில் இருந்து காவல்துறை உதவியுடன் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது கண்டிக்கதக்கது. எனவே, குடுக்கம்பாளையம், பெத்தாங்குப்பம், மலையடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இப்போதுள்ள நிலைமையே தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ராமதாஸ் வேண்டுகோள் முந்திரி சாகுபடி செய்து வருபவர்களை அகற்றக்கூடாது appeared first on Dinakaran.

Read Entire Article