சென்னை:ராமதாஸ் தலைமையில் ஜூலை 8-ம் தேதி பாமக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு நடைபெறும் என பு.தா.அருள்மொழி தெரிவித்தார். ராமதாஸ் தலைமையில் நடந்த புதிய தலைமை நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் பேட்டி அளித்தார். ஜி.கே.மணி, பு.தா.அருள்மொழி, முரளிசங்கர், சையத் மன்சூர் உசேன், கரூர் பாஸ்கரன் உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
The post ராமதாஸ் தலைமையில் ஜூலை 8-ல் பாமக செயற்குழு கூட்டம்..!! appeared first on Dinakaran.