சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக மராட்டியத்தில் போராட்டச் சூறாவளி சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் “மொழி உரிமைப் போர் மாநில எல்லைகளை கடந்து மராட்டியத்தில் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி செய்யும் மராட்டியத்தில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி 2-ம் முறையாக பின்வாங்கியுள்ளனர். உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த இந்தி எதிர்ப்பு பேரணியும், உரை வீச்சும் உற்சாகம் தருகிறது. ஒன்றிணைவோம் வா! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” என முதல்வர் பதிவிட்டுள்ளார்.
The post இந்தி திணிப்புக்கு எதிராக மராட்டியத்தில் போராட்டச் சூறாவளி சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.