ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டதா? - விசாரணை கோரும் கே.பாலு

6 hours ago 3

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப் பட்டதாக கூறப்படுவது குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.பாலு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அப்படி ஒரு முயற்சி நடந்திருந்தால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

Read Entire Article