குஜிலியம்பாறை, அக். 14: குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. கடந்த 3ந்தேதி காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழா தொடங்கியது. இதையொட்டி கோயிலில் நவராத்திரி கொழு பொம்மைகள் அமைத்து நாள் தோறும் கல்யாண நரசிங்க பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. நவராத்திரி தொடங்கிய நாள் முதல் கடந்த 10 நாட்களாக மண்டகப்படிதாரர்களின் சிறப்பு வழிபாடு நடந்தது.
இந்நிலையில் விஜயதசமி தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்தில் கல்யாண நரசிங்க பெருமாள் உற்சவர் எழுந்தளிர்ந்து வீதி உலா சென்று, அம்பு போடுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது. நவராத்திரி விழா அம்பு போடுதல் நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்தில் திளைத்த மக்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர். நவராத்திரி அம்பு போடுதல் ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர் கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் விகேஏ.கருப்பண்ணன் செய்திருந்தார். இதில் மூத்த அர்ச்சகர் ராமகிருஷ்ணன், அர்ச்சகர் ரமேஷ், கோயில் மணியக்காரர் சதாசிவம், ராமகிரி கோயில் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
The post ராமகிரி நரசிங்க பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா அம்பு போடுதல் நிகழ்ச்சி: பக்தர்கள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.