ராம நவமி: வாழை இலையில் வரையப்பட்ட அயோத்தி பாலராமர்

23 hours ago 1

அமராவதி,

மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர் மற்றும் கல்கி ஆகும். அதில் 7-வது அவதாரமாகக் கருதப்படும் ராமா், நவமி திதியில் பிறந்தாா். அவரின் அவதார தினமான ராம நவமி விழாவை பக்தர்கள் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ராம நவமியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் புருஷோத்தமன் என்பவர் வாழை இலையில் அயோத்தி பாலராமர் உருவத்தை வரைந்து அசத்தி உள்ளார். அவரின் ஓவியம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புருஷோத்தமன் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் உருவப்படங்களை இலைகள், புளியங்கொட்டைகளில் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article