ராணுவத்தில் அதிகாரிபணி: விண்ணபிக்க 28-ம் தேதி கடைசி நாள்

2 hours ago 2

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் நிரப்பபட உள்ள ஜே.ஏ.ஜி(JAG) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் பெண் சட்டபடிப்பில் பட்டம் பெற்ற பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயதுவரம்பு: 01ஜுலை 2025-ன்படி 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்: ஆண்கள்-4,பெண்கள்-4

பணி காலம்:14 ஆண்டுகள்

கல்வி தகுதி: குறைந்த பட்சம் சட்டபடிப்பில் 55 சதவீதம் மதிப்பென் பெற்றிருக்க வேண்டும்

பணி மற்றும் சம்பளம் விவரம்:

நீதிபதி அட்வகேட் ஜெனரல்(Judge Advocate General's)

லெப்டினன்ட் (Lieutenant) சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500

தேர்வு செய்யப்படும் முறை: படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் முதல்கட்ட எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர். சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரம் ராணுவ அதிகாரி பணிக்குரிய பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் இந்திய ராணுவத்தில் "லெப்டினன்ட்டாக பணி அமர்த்தப்படுவர்.

பயிற்சியின்போது மாதம் ரூ.56,100 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.11.2024 


Read Entire Article