ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி

1 day ago 4

கோவை,மே22:காஷ்மீர் பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இந்திய மக்களை காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில் இந்திய தேசிய கொடி ஏந்தி பேரணி நடந்தது.பேரணியில் பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், தூயவழி கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் இமானுவேல் ஜேக்கப் பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை நடந்தது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு மாநில துணை தலைவர் கமல்ஹாசன்,மாவட்ட பொறுப்பாளர்கள் மோகன்குமார், அரிசி கடை செல்வராஜ், நந்தகோபால்,கெம்பட்டி காலனி நடராஜ், தாண்டவனாச்சாரியார் மற்றும் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
==================

The post ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article