ராணுவ தொழிற்சாலையில் 723 இடங்கள்

4 weeks ago 6

10ம் வகுப்பு/ஐடிஐ/ பிளஸ் 2 படித்தவர்களுக்கு வாய்ப்பு

1. Junior Office Assistant: 27 இடங்கள் (பொது-12, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2). இவற்றில் 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், ஓரிடம் மாற்றுத் திறனாளிக்கும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தி அல்லது ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ.29,200-92,300.

2. Civil Motor Driver: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1). வயது: 18 முதல் 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19.900-63,200.

3. Fireman: 247 இடங்கள் ( பொது-102, பொருளாதார பிற்பட்டோர்-24, ஒபிசி-66, எஸ்சி-37, எஸ்டி-18). இவற்றில் 24 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 9 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200. உடற் தகுதி: குறைந்தபட்சம் 165 செ.மீ., உயரம், 50 கிலோ உடல் எடை, மார்பளவு சாதாரண நிலையில் 81.5 செ.மீ., விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., இருக்க வேண்டும். உடற்திறன் தகுதி: 65.5 கிலோ கிராம் எடையுள்ள மனிதனை தூக்கிக் கொண்டு 96 வினாடிகளில் 183 மீட்டர் தூரம் ஓட வேண்டும். 2.7 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும். 3 மீட்டர் செங்குத்தாக கயிறு வேண்டும்.

4. Carpenter & Jointer: 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-1). வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,900-63,200.

5. Painter/Decorator: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1). வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பெயின்டர் டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,900-63,200.

6. Tradesman Mate: 389 இடங்கள் (பொது-159, பொருளாதார பிற்பட்டோர்- 38, ஒபிசி-105, எஸ்சி-58, எஸ்டி-29). இவற்றில் 38 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 15 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்புத் தேர்ச்சியுடன் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். மேலும் 6 நிமிடங்களில் 1.5 கி.மீ., ஓடி கடக்கும் திறன் மற்றும் 50 கிலோ எடையை தூக்கிக் கொண்டு 100 வினாடிகளில் 200 மீட்டர் தூரம் ஓட வேண்டும். சம்பளம்: ரூ.18,000-56,900.

7. Material Assistant: 19 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-5, எஸ்சி-2, எஸ்டி-1). இவற்றில் ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் மெட்டீரியல் மேனேஜ்மென்ட் பாடத்தில் டிப்ளமோ.

8. Tele Operator Grade II: 14 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1) இவற்றில் ஒரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் PBX-Board பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேச தெரிந்திருப்பது விரும்பத்தக்கது. எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, டிரேட் டெஸ்ட் மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.www.aocrecruitent.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.12.2024.

The post ராணுவ தொழிற்சாலையில் 723 இடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article