ராணுவ தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம்: எல்லையோரங்களில் பலத்தை அதிகரிக்க உத்தரவு

6 hours ago 2

புதுடெல்லி,

எல்லையில் உச்ச கட்ட போர்ப்பதற்றம் நிலவும் நிலையில், ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லையோரங்களில் பலத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு ரானுவ தளபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போது அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, ராணுவத்தில் நிர்வாக ரீதியான மாறுதல்களை மேற்கொள்ளலாம். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களை எல்லைப்பகுதிக்கு அழைத்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 1948 விதியின் கீழ் 3 ஆண்டுகளுக்கு இந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு எல்லையை பாகிஸ்தான் பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.   எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை  குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துவருகிறது. இதனால், எல்லையோர மாநிலங்களில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது.  

Read Entire Article