போபால் : ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதத்தை வைத்து சர்ச்சைக் கருத்து கூறிய மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா மன்னிப்பு கோரியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்கிய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை, ‘பாகிஸ்தானியர்களின் சகோதரி’ என ம.பி. பாஜக அமைச்சர் கூறியதற்கு கண்டனம் எழுந்தது.”பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம்” என அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசினார்.
The post ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதத்தை வைத்து சர்ச்சை பேச்சு : மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர்!! appeared first on Dinakaran.