புதுக்கோட்டை, ஜன.25: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் படியும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதல் படியும் வரும் 28ம்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமானது ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது. அதன் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக விழிப்புணர்வு பேரணியானது, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சந்தைப்பேட்டையில் தொடங்கி திலகத்திடல், உழவர் சந்தை மற்றும் மக்கள் அதிகமாக இருக்கும் இடங்கள் வழியாக பேரணியாக மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ முகாமிற்கு வருகை தர கோஷமிட்டு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுதந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சந்தைப்பேட்டை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் புதுக்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு, ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் ,அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
The post ராணியார் அரசு கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் appeared first on Dinakaran.