திருடனிடம் நகையை வாங்கி அடகு வைத்த குற்றச்சாட்டில் வேலூர் மத்திய சிறை வார்டன்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற 2 திருட்டு தொடர்பாக மாமண்டூரைச் சேர்ந்த சூர்யா கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், தான் வேலூர் சிறையில் இருந்த போது பழக்கமான ஜெயில் வார்டன்கள் பாஸ்கரன், அப்துல் சலாம் ஆகியோரிடம் திருட்டு நகைகளை கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் அடகு வைத்திருந்த 14 சவரன் நகையை மீட்டனர்.