
ராணிப்பேட்டை மாவட்டம் பெருவளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று எதிர்பாராதவிதமாக குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. சிறுது நேரத்தில் குடோனின் அனைத்து பகுதிகளிலும் தீ பரவியது. இதனால் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தது.
இந்த நிலையில் தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். அதே சமயம் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயை அணைக்கும் போது கரும்புகை ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு செல்வதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.