ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

8 hours ago 2

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள கிராமம் மேட்டு குன்னத்தூர். இந்த ஊரைச் சேர்ந்த சரவணன் மகன் புவனேஸ்வரன் (7 வயது), கோபி என்பவரது மகன்கள் மோனி பிரசாத் (9 வயது) மற்றும் சுஜன் (7 வயது) ஆகிய 3 சிறுவர்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அந்த பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

ஆழமான பகுதியில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக நீரில் முழ்கினர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவர்களை மீட்க முயற்சித்தனர். அவர்களால் முடியாததால் உடனடியாக பாணாவரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 சிறுவர்களையும் மீட்டு பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article