ராட்சத அலையில் மாயமான சிறுவன் உடல் கரை ஒதுங்கியது

3 months ago 19

திருவொற்றியூர்: சின்ன எர்ணாவூரை சேர்ந்த ஜோஸ்வா(17), நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். பின்னர், திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் அருகே உள்ள கடற்கரைக்கு தனது நண்பர்களுடன் சென்ற ஜோஸ்வா, கடலில் குளித்துள்ளார். அப்போது, ராட்சத அலையில் சிக்கி ஜோஸ்வா கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். சக நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. உடனே கரைக்கு வந்து, அங்கிருந்த மீனவர்களிடம் தெரிவித்தனர்.

தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் அங்கு வந்து, மீனவர்களுடன் இணைந்து பைபர் படகுகள் மூலம் கடலில் தேடினர். ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை ஜோஸ்வா கிடைக்கவில்லை. தொடர்ந்து நேற்று 2வது நாளாக ஜோஸ்வாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாணவன் ஜோஸ்வா உடல் நேற்று கரை ஒதுங்கியது. போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ராட்சத அலையில் மாயமான சிறுவன் உடல் கரை ஒதுங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article