ராஜஸ்தானில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோ வலைதளங்களில் வைரல்: பாதுகாப்பை உறுதி செய்ததாக பல்கலை விளக்கம்

1 month ago 4

சென்னை: ராஜஸ்தானில் இந்திய அளவிலான கபடி போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாடு சார்பில் சென்னை தனியார் கல்லூரி கபடி அணியும் பங்கேற்று உள்ளது. போட்டியின் போது தமிழ்நாட்டு வீரர்களுக்கு முறையாக பாயிண்ட்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக வீரர்கள் நடுவர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது ராஜஸ்தான் அணி வீரர்கள், தமிழக அணி வீரர்களை சரமாரிமாக கீழே தள்ளி தாக்கினர். இதில் தமிழக வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மீண்டும் போட்டியில் பங்கேற்க அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கூடி உள்ள இடத்தில் இதுபோன்று மாநிலம் சார்பில் விளையாடுவதற்கு வந்த வீரர்களை ராஜஸ்தான் வீரர்கள் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் நடந்ததும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசாரித்து, அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்தோம். தொடர்ந்து நேற்று நடந்த போட்டியில் மாணவர்கள் சுமுகமாக பங்கேற்றனர். இன்று தமிழ்நாட்டிற்கு திரும்புகின்றனர். தொடர்ந்து பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் உள்ளோம், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ராஜஸ்தானில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோ வலைதளங்களில் வைரல்: பாதுகாப்பை உறுதி செய்ததாக பல்கலை விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article