ராஜஸ்தானில் கார் மீது பஸ் மோதல்உத்தர பிரதேசம், மகா கும்பமேளாராஜஸ்தான்: கார்-பஸ் மோதல்; கும்பமேளாவுக்கு சென்ற 8 பேர் பலியான சோகம்

3 hours ago 2

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இருந்து அரசு பஸ் ஒன்று அஜ்மீர் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அஜ்மீரில் இருந்து 8 பயணிகளுடன் கார் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், மவுகம்புரா பகுதியருகே சென்றபோது, சாலை பிரிப்பான் அருகே, பஸ்சின் டயர் ஒன்று திடீரென வெடித்தது.

இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் கார் உருக்குலைந்தது. காரில் பயணம் செய்த 8 பேரும் பலியானார்கள். இதுதவிர 6 பேர் காயமடைந்தனர். இதனை துணை சூப்பிரெண்டு தீபக் கந்தேல்வால் உறுதி செய்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு ராஜஸ்தானின் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா இரங்கல் தெரிவித்து கொண்டார். ராஜஸ்தானின் துணை முதல்-மந்திரி பிரேம் சந்த் எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார். காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வேண்டிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வருவதற்கு கடவுள் ஸ்ரீராமர் அருள் புரியட்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் காரில் உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர்கள் அனைவரும் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.

Read Entire Article