ராஜஸ்தானில் கல்லூரி சுவர்களுக்கு ஆரஞ்சு வண்ணம் பூச அரசு உத்தரவு: கல்வியை காவிமயமாக்குவதாக குற்றச்சாட்டு

6 months ago 18

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கல்லூரி சுவர்களுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில்,காயகல்ப் திட்டத்தின் கீழ் 20 அரசு கல்லுாரிகளின் கட்டிடங்கள், நுழையும் பகுதிகளில் உள்ள அறை ஆகியவற்றில் ஆரஞ்சு வண்ணம் பூச வேண்டும் என்று மாநில கல்லுாரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 20 கல்லுாரிகளில் ஆரஞ்சு நிறம் பூசப்பட உள்ளது என கல்லுாரி கல்வி இயக்குனரக அதிகாரி தெரிவித்தார். கல்லூரிகளுக்கு ஆரஞ்சு நிறம் பூசுவது கல்வியை காவிமயமாக்க பாஜ அரசு செய்யும் முயற்சி என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

The post ராஜஸ்தானில் கல்லூரி சுவர்களுக்கு ஆரஞ்சு வண்ணம் பூச அரசு உத்தரவு: கல்வியை காவிமயமாக்குவதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article