சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1200 பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகள் வீதம் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 6 ஆயிரம் செம்மறியாடுகள் வழங்கப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்கும் பொருட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு திட்ட நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை கடந்த 20.8.2024 அன்று தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தொடங்கப்பட்டது. இதில், சிவகங்கை மாவட்டத்திற்கென 6 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் பெறப்பட்டு உள்ளன. கால்நடை மருந்தகங்களுக்கு வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் கால்நடைகளுக்கு இம்மருத்துவ ஊர்தியின் வாயிலாக உரிய நேரத்தில் சிகிச்சை மற்றும் மருத்துவ பணி மேற்கொள்ளப்படுகிறது.
இச்சேவையை கால்நடை வளர்ப்போர் பெற்று பயன்பெறும் வகையில், கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1962 என்ற எண்ணும் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிலுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் 2021-22ன் கீழ் 1200 பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகள் வீதம் மொத்தம் 6 ஆயிரம் ஆடுகள் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2022-23ம் நிதியாண்டில் 10 பயனாளிகளுக்கு ரூ.16.77 லட்சம், 55 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் 40 ஏக்கருக்கு தீவன விதை,
ஏழ்மை நிலையில் உள்ள கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் (40 கோழிக் குஞ்சுகள் வீதம்) 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.19.20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு 1200 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மேலும், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் திட்டத்தின் கீழ் 2022-23ம் நிதியாண்டில் 240 முகாம் ரூ.10.56 லட்சம் மதிப்பீட்டில் நடத்தப்பட்டு 20,591 பயனாளிகளும், 2023-24ம் நிதியாண்டில் 240 முகாம்கள் ரூ.10.56 லட்சம் மதிப்பீட்டில் நடத்தப்பட்டு 17,359 பயனாளிகளும் பயனடைந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post சிவகங்கை மாவட்டத்தில் 1200 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடியில் ஆடுகள் appeared first on Dinakaran.