'ராஜபுத்திரன்' படத்தின் டீசர் வெளியீடு

1 week ago 4

சென்னை,

இளைய திலகம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரபு. இவர் 1980 காலகட்டங்களில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கவின் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில், நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் பிரபு, 'ராஜபுத்திரன்' எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது கதாநாயகனாக நடித்து வரும் வெற்றிக்கு தந்தையாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து கிருஷ்ண பிரியா, ஆர்.வி உதயகுமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், தங்கதுரை, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தை மகா கந்தன் எழுதி இயக்கியிருக்கிறார். கிராமத்துக் கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இப்படம் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் 'ராஜபுத்திரன்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Read Entire Article