
மும்பை,
வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை - 19.05.2025) இந்திய பங்குச்சந்தையில் நிப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 30 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 991 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 195 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 550 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .
75 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 552 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 154 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 173 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
22 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 790 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 192 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 157 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தல், சர்வதேச நிலையற்ற தன்மை, கடந்த சில நாட்களாக தொடர் ஏற்றம் உள்பட பல்வேறு காரணங்களால் இன்று நிப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.