ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

3 months ago 21

 

ராஜபாளையம், அக்.7: ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தின் சார்பில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மகாசபை தலைவர் ஜெகநாதராஜா தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் செல்வி, சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமரன், கவுதம்விஜய் ஆகியோர் கலந்துகொண்டு போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார்கள். இன்ஸ்பெக்டர் செல்வி பேசுகையில், முதலில் தங்கள் பகுதிகளில் எந்த மாதிரியான பிரச்சனைகள் உள்ளன என்று வினா எழுப்பினார்.

அதற்கு அங்கிருந்தவர்கள் கூறிய விபரங்களை கேட்டுக்கொண்டு, பிரச்சனை இருக்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பொது இடங்களில் மது குடிப்போர், இரவு நேரங்களில் தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தயங்காமல் தெரிவிக்க வேண்டும்.

உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டம் ஒழுங்கு பொது அமைதி மற்றும் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் ஒழிப்பு ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் சாலை பாதுகாப்பு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, சைபர் கிரைம் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது தொடர்பான குற்றங்கள் குறித்து புகார்கள் செய்ய முக்கிய அலைபேசி எண்களும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

The post ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article