ராஜபாளையம், பிப்.23. ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்மாள் (65). இவர் பங்களா காடு என்ற பகுதியில் மாட்டுக்கு புல் அறுக்க சென்றபோது, காட்டு மாடு முட்டியதில் உயிரிழந்தார். இது குறித்து சேத்தூர் ஊரக காவல் நிலைய போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர், காட்டு மாடு முட்டி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, வனத்துறை பரிந்துரையின் பேரில் வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக ஈமச்சடங்கு செலவுக்காக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, அவரது மகன் மாரியப்பனிடம் ராஜபாளையம் தாசில்தார் ராமசுப்பிரமணியம் முன்னிலையில், வனச்சரகர் கார்த்திகேயன் வழங்கினார். அப்போது, சேத்தூர் ஊரக காவல் சார்பு ஆய்வாளர் முருகராஜ், மற்றும் வனத்துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post ராஜபாளையம் அருகே காட்டு மாடு தாக்கி பலியானவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி appeared first on Dinakaran.