ராஜபாளையத்தில் விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

1 day ago 2

ராஜபாளையம், ஏப்.2: ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்கபுரத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் வேலை சம்பளம் பாக்கியை வழங்கவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகி அய்யனார் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம், விதொச வரதராஜன், ஏஐடியுசி ரவி, முத்துக்குமாரி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,

கணேசமூர்த்தி, ஏஐஒய்எப் வக்கீல் பகத்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் மோடி அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்க மறுக்கிறது. 100 நாள்வேலை தொழிலாளர்களுக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை, குடும்பத்தில் கடன்சுமை அதிகரித்து அவதிப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து வேலை வழங்கவும் நூறு நாளை 150 நாள் வேலையாக உயர்த்தவும் வலியுறுத்தினர்.

The post ராஜபாளையத்தில் விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article