'ராக்கெட் டிரைவர்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு

3 months ago 25

சென்னை,

ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். பேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக "ராக்கெட் டிரைவர்" உருவாகிறது. இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார்.எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலை அவரது 17-வயதில் காண்கிறார். அப்போது அரங்கேறும் விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை.

அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கவுஷிக் கிரிஷ் இசையமைக்கிறார்.

இப்படம் வருகிற 18-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. 

#RocketDriver Sneak Peek - Checkout whether young Abdul Kalam has actually landed in Chennai https://t.co/U3dkUhBEnXIn theaters from Oct 18th @actorvishvath @TheSunainaa @sriram_a27 @iamkaushikkrish @iamyuvibv @anirudhvallabh pic.twitter.com/UCizLeacUi

— Stories By The Shore (@storiesbtshore_) October 14, 2024
Read Entire Article