ராகுல்காந்திக்கு எதிராக பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம்: செல்வப்பெருந்தகை பேட்டி

3 months ago 26

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து அவதூறு கருத்துகளை பேசிவரும் ஆர்எஸ்எஸ், பாஜவை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் சென்னை அண்ணா சாலை ஜிம்கானாகிளப் காமராஜர் சிலையிலிருந்து எழும்பூர் அருங்காட்சியகம் வரை நேற்று அமைதிப் பேரணி நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷ்ணு பிரசாத், சுதா ராமகிருஷ்ணன், சென்னை மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், டில்லி பாபு, எஸ்சி பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார், விளையாட்டு அணிகளின் தலைவர் பெரம்பூர் நிசார், மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், ராம சுகந்தன், மாநில பொது செயலாளர்கள் தளபதி பாஸ்கர், தமிழ்நாடு இலக்கிய அணி தலைவர் புத்தன், ஆர்.டி.ஐ பிரிவு துணைத் தலைவர் மயிலை தரணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிருபர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ‘‘ராகுல் காந்திக்கு எதிரான வன்முறை பேச்சுகளை பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் தரப்பில் தொடர்வோம்’’ என்றார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசுகையில், ‘‘100 நாட்கள் தாண்டிவிட்டோம் என்று மோடி சொல்கிறார். ஆனால் மோடி விரைவில் நாடாளுமன்றத்திலிருந்து துரத்தப்படுவார்’’ என்றார்.

The post ராகுல்காந்திக்கு எதிராக பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article