ராகுல், சந்திரபாபு நாயுடுவுடன் துரை வைகோ சந்திப்பு

3 months ago 20

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லி ஜென்பத் சாலையில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் நேற்று (9ம்தேதி) பகல் 12 மணிக்கு அவரைச் சந்தித்தேன். அரியானா, காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஏராளமான தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுலை சந்திக்க காத்திருந்தனர். இருந்தாலும் எனக்கு நேரம் ஒதுக்கி, இன்முகத்துடன் வரவேற்று, மதிமுக தலைவர் வைகோவின் உடல் நலன் குறித்தும் அக்கறையுடன் விசாரித்தார். முதலில் அவருக்கு காஷ்மீரில் வெற்றிக் கனியைப் பறித்ததற்காக வாழ்த்து தெரிவித்தேன்.

திராவிட இயக்க அரசியல் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு இருப்பதால் தமிழர்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள், அதனால்தான் அங்கு மதச்சார்பின்மை கொள்கை வெற்றி பெற்றுள்ளது என்று ராகுல்காந்தி கூறியபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். பிறகு எனது மகளின் திருமண அழைப்பிதழை அவரிடம் கொடுத்ததும், மகிழ்ச்சிப் பொங்க எங்கள் குடும்பத்தை பற்றியும், மகன், மகளைப் பற்றியும் கேட்டறிந்தார்.
அதேபோன்று, டெல்லியில் நேற்று மாலை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து திருமண அழைப்பிதழை அளித்தேன். வைகோவின் உடல் நலனை விசாரித்தார். எனது குடும்பத்தினர் மற்றும் மணமக்களைப் பற்றியும் கேட்டுவிட்டு, மணவிழாவுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

The post ராகுல், சந்திரபாபு நாயுடுவுடன் துரை வைகோ சந்திப்பு appeared first on Dinakaran.

Read Entire Article