ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் பாஜக எம்.பி. வலியுறுத்தல்

2 hours ago 1

புதுடெல்லி,

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி நேற்று பேசினார் . அப்போது, இந்திய நிலப் பகுதியை சீனா ஆக்கிரமித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி சீனாவின் அனைத்து துறை ஆதிக்கம் குறித்து விரிவாக விளக்கினார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில்,

காங்கிரஸ் மூத்த தலைவர் தனது நாடாளுமன்ற உரிமையைப் பயன்படுத்தி தனது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தாமல் வதந்திகளை பரப்புகிறார். உண்மைக்கு மாறான தகவல்களை அவைக்கு தெரிவித்திருக்கிறார். நமது நாட்டின் கவுரவத்தை சீர்குலைக்கும் வகையில் அவர் பேசி உள்ளார். மொபைல் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை, ஆனால் இங்கு மட்டுமே சேகரிக்கப்படுகின்றன, இந்திய நிலப் பகுதியை சீனா ஆக்கிரமித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி சீனாவின் அனைத்து துறை ஆதிக்கம் குறித்து விரிவாக விளக்கினார் ராகுல் காந்தி. இது குறித்து ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Entire Article