ராகுல் காந்தி அமெரிக்காவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

1 month ago 6

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வருகிற 21 மற்றும் 22-ந் தேதிகளில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் அவர் உரையாற்றுகிறார். மேலும் அங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனும் கலந்துரையாடுகிறார்.

முன்னதாக ரோட் தீவில் வெளிநாடுவாழ் இந்தியர்களை சந்திக்கும் ராகுல் காந்தி, இந்திய சர்வதேச காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களையும் சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா தெரிவித்தார்.

Read Entire Article