ரஷ்யாவை கண்டித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.!

2 weeks ago 4
உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா ராணுவத்தினரை ஈடுபடுத்தும் ரஷ்யாவின் முடிவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வடகொரியாவுடன் ரஷ்யா வெளிப்படையாகக் கூட்டு வைத்துக்கொண்டு ஆயுதங்களையும், பீரங்கிக் குண்டுகளையும் வாங்கிக் குவித்துள்ளதாக எக்ஸ் சமூகத் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் எல்லையில் 3 ஆயிரம் வடகொரிய ராணுவத்தினருக்கு ரஷ்யா பயிற்சி அளித்து வருவதாகவும், விரைவில் அவர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஈடுபடுத்தும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் சீனா, உக்ரைனுக்கு எதிராக வடகொரிய ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படும் விஷயத்தில் மவுனமாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
Read Entire Article