ரஷ்யாவில் அரசு ஆதரவு யூடியூப் சேனல்கள் அகற்றம்.. கூகுள் நிறுவனத்துக்கு இமாலய அபராதம் விதித்த ரஷ்யா!!

3 months ago 13

மாஸ்கோ: ரஷ்யாவில் அரசு ஆதரவு யூடியூப் சேனல்களை அகற்றியதற்காக கூகுள் நிறுவனத்துக்கு விவரிப்பதற்கே கடினமான பெரும் தொகையை ரஷ்ய நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக ஏராளமான அரசு ஆதரவு சேனல்களை யூடியூப் நிர்வாகம் தடை செய்தது. இது தொடர்பான வழக்குகள் மாஸ்கோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கூகுள் நிறுவனத்துக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2.5 டெசில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது பூமியின் மொத்த செல்வத்தை விட மிகப்பெரிய தொகையாகும். 2க்கு பிறகு 26 பூஜியங்கள் இடம்பெறும் இந்த தொகையினை 2.5 டெசில்லியன் டாலர்கள் என கணித வல்லூநர்கள் குறிப்பிடுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் மூத்த உள்நாட்டு உற்பத்தியை விட இந்த அபராதத்தொகை அதிகம். ரஷ்யா கூகுளிடம் கேட்கும் தொகை பூமியில் புழக்கத்தில் இருக்கும் பணத்தை விட அதிகம் என்றும் கூறலாம்.

2.24 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட கூகுள் நிறுவனத்துக்கு இது அசாத்தியமான அபாரதமாகும். ரஷ்யாவின் நிர்வாக குற்றச்சட்டத்தை மீறியதற்காக கூகுள் அபராதத்தொகையை 9 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அதற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் அபராதம் இரட்டிப்பாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தவில்லை என்றால் ரஷ்யாவில் கூகுள் பயன்பாடு தடை செய்யப்படும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

The post ரஷ்யாவில் அரசு ஆதரவு யூடியூப் சேனல்கள் அகற்றம்.. கூகுள் நிறுவனத்துக்கு இமாலய அபராதம் விதித்த ரஷ்யா!! appeared first on Dinakaran.

Read Entire Article