மாஸ்கோ: பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றடைந்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது. ரஷ்யாவின் கசான் நகரத்தில் இன்றும், நாளையும் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
அந்த வகையில் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்தார். புடினின் அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றடைந்தார். ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று மாலை பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரதமர் மோடி விருந்தில் கலந்து கொள்கிறார். ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடி அங்கு அதிபர் புதின் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங்கை பிரதமர் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. லடாக்கில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
The post ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.