
சென்னை,
'மிஸ்டர் பச்சன்' படத்தை தொடர்ந்து, நடிகர் ரவி தேஜா தனது 75-வது படத்தில் நடித்துவருகிறார். 'மாஸ் ஜாதரா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்க அறிமுக இயக்குனர் பானு போகவரபு இயக்குகிறார்.
இதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். 'தமாகா' படத்திற்கு பிறகு மீண்டும் ரவி தேஜா - ஸ்ரீலீலா இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர். 'தமாகா' படத்திற்கு இசையமைத்த பீம்ஸ் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, 'து மேரா லவ்வர்' என்ற பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில் மறைந்த இசையமைப்பாளர் சாக்ரி குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளனர்.