ரயில்வேயில் 1785 அப்ரன்டிஸ்கள்

3 weeks ago 7

பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 1785.

வயது: 01.01.2025 தேதியின்படி 15 முதல் 24க்குள். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ஒபிசியினருக்கு ரயில்வே விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: Electrician/Fitter/Plumber/Painter/Welder (Gas & Electric)/ Diesel Mechanic/Machinist/Turner/Carpenter/A/C & Refrigeration/Mechanic/Machine Tool Maintenance/Cable Jointer/Crane Operator/Lineman/Winder (Armature)

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.100 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் ேபாது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.

கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.www.rrcser.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.12.2024.

The post ரயில்வேயில் 1785 அப்ரன்டிஸ்கள் appeared first on Dinakaran.

Read Entire Article