ரயில்வே தண்டவாளம் அருகே ரத்தக் கறையுடன் ஆண் சிசு சடலம்: போலீசார் விசாரணை

1 day ago 2

பெரம்பூர்: வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ராமலிங்க கோயில் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே, நேற்று மாலை முழுமையாக வளர்ச்சி அடையாத நிலையில் ஆண் குழந்தையின் சிசு சடலம் கிடப்பதாக வியாசர்பாடி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திறகு சென்ற வியாசர்பாடி போலீசார் துணியில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த முழுமையாக வளர்ச்சி அடையாத குழந்தை சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து யாரேனும் கருக்கலைப்பு செய்து குழந்தையை இங்கு போட்டு விட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரயில்வே தண்டவாளம் அருகே ரத்தக் கறையுடன் ஆண் சிசு சடலம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article