சென்னை: ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் திருப்பூரில் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று கோவை – திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் சொந்த ஊருக்கு பயணித்துள்ளார். மகளிர் பயணிக்கும் பெட்டியில் தனியாக பயணித்தபோது, அந்த பெட்டியில் ஏறிய இளைஞர் ஒருவர், கர்ப்பிணி என்றும் பாராமல் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அவரை ஒடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.
இதனால் அந்த பெண்ணின் கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கர்ப்பிணியை மீட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடுள்ளார். இதையடுத்து கர்ப்பிணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயிலில் இருந்து தள்ளிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் கே.வி.குப்பம் அருகே பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்கள் பெட்டியில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்து தாக்கியுள்ளனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய தமிழ்நாடு டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி 3 நாட்களில் விரிவான அறிக்கை அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஓடும் ரயிலில் நடந்தது என்ன?: கர்ப்பிணி விளக்கம்
மகளிர் பெட்டியில் யாரும் இல்லை என்பதை அறிந்து என்னிடம் தவறாக நடந்து கொண்டான்.
தலை முடியை பிடித்து இழுத்துச் சென்று, கையை உடைத்தான்.
ஒரு கையால், ரயிலில் இருந்து கீழே விழுந்துவிடாமல் இருக்க போராடினேன்.
பிறகு, உதைத்து என்னை கீழே தள்ளிவிட்டான்; அதன் பிறகு என்ன ஆனது எனத் தெரியாது.
ரயில் பெட்டியில் சுமார் அரை மணி நேரம் அவனோடு போராடினேன்.
கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்; எந்த பெண்ணுக்கும் இதுபோல் நடக்கக்கூடாது.
The post ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை விவகாரம்.. தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்!! appeared first on Dinakaran.