வேலூர் / சென்னை: ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரது முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த பெண் ஒருவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கர்ப்பிணியான இவர் கோவை - திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் கடந்த 6-ம் தேதி சென்றபோது, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர், ஓடும் ரயிலில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டார். இதில் அந்த பெண் பலத்த காயமடைந்தார்.