ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

3 months ago 12

சென்னை: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு, பலத்த காயமடைந்த கர்ப்பிணியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர், மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ரேவதி என்ற நான்கு மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 06.02.2025 அன்று பிற்பகல் கோயம்புத்தூர் – திருப்பதி விரைவு ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தபோது, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத் தாக்கி, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார்.

Read Entire Article