ஜோலார்பேட்டை: திருப்பூரில் உள்ள கடையில் டெய்லர் வேலை செய்து வந்தவர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 36 வயது இளம்பெண், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் கடந்த 6ம்தேதி சித்தூருக்கு ரயிலில் பயணம் செய்தபோது வாலிபர் ஒருவர் பலாத்கார செய்ய முயற்சித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் அவரது வயிற்றில் இருந்த சிசு இறந்து விட்டது. இதையடுத்து கைதான சைக்கோ வாலிபர் ஹேம்ராஜ் மீது 92 பிஎன்எஸ் வழக்கு (வயிற்றிலிருந்த பிறக்காத குழந்தையை கொன்ற பிரிவு) பதிவு செய்துள்ளனர்.
The post ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிய சைக்கோ மீது கொலை வழக்கு appeared first on Dinakaran.