ரஞ்சி டிராபி; தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்... சத்தீஷ்கார் 500 ரன்கள் குவிப்பு

2 months ago 13

கோவை,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதன் 3-வது லீக்கில் தமிழ்நாடு- சத்தீஷ்கார் அணிகள் (டி பிரிவு) இடையிலான ஆட்டம் கோவையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சத்தீஷ்கார் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய சத்தீஷ்கார் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 293 ரன்கள் எடுத்திருந்தது. த்தீஷ்கார் தரப்பில் அனுஜ் திவரி 68 ரன்னுடனும், சஞ்சீத் தேசாய் 52 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த சத்தீஷ்கார் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் சத்தீஷ்கார் அணி தனது முதல் இன்னிங்சில் 169.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 500 ரன்கள் குவித்தது. சத்தீஷ்கார் தரப்பில் ஆயுஷ் பாண்டே 124 ரன்கள் எடுத்தார்.

தமிழகம் தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 23 ரன்கள் எடுத்துள்ளது. தமிழகம் தரப்பில் ஜெகதீசன் 6 ரன்னுடனும், அஜித் ராம் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Read Entire Article