ரஞ்சி கோப்பை காலிறுதி: மும்பை அணியில் களமிறங்கும் ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ்

3 hours ago 1

மும்பை,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப் 2' இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

அதன்படி சவுராஷ்டிரா, குஜராத், அரியானா, மும்பை, விதர்பா, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. காலிறுதி சுற்று ஆட்டங்கள் வருகிற 8-ம் தேதி தொடங்குகின்றன.

காலிறுதியில் ரஞ்சி கோப்பை வரலாற்றில் 42 முறை சாம்பியன் ஆன மும்பை அணி அரியானாவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரகானே தலைமையிலான அந்த அணியில் ஷிவம் துபே மற்றும் சூர்யகுமார் யாதவ் களமிறங்க உள்ளனர்.

மும்பை அணி விவரம் பின்வருமாறு:- ரகானே (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாட், ஷிவம் துபே, ஆகாஷ் ஆனந்த், ஹர்திக் தாமோர், சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஷர்துல் தாக்கூர், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டி சவுசா, ராய்ஸ்டன் டயஸ், அதர்வா அன்கோலேகர், ஹர்ஷ் தன்னா.

Read Entire Article