ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி இன்று தொடங்குகிறது : விதர்பா - கேரளா மோதல்

3 hours ago 1

நாக்பூர்,

90-வது ரஞ்சி கோப்பையை வெல்லப்போது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி மார்ச் 2-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியனான மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விதர்பா அணி, கேரளாவை எதிர்கொள்கிறது.

விதர்பா அணி 3-வது முறையாகவும், கேரளா முதல்முறையாகவும் கோப்பையை கையில் ஏந்த வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இருப்பினும் விதர்பாவின் கையே ஓங்க அதிக வாய்ப்புள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம்.

Read Entire Article