'ரஜினியுடன் நடனமாடுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை' - நடிகர் ரக்சன்

3 months ago 20

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. சமீபத்தில், இப்படத்தின் இரண்டு பாடல்களான 'மனசிலாயோ' மற்றும் 'ஹண்டர் வன்டார்' பாடல்கள் வெளியாகி வைரலாகின.

இந்தநிலையில், நடிகர் ரக்சன் 'வேட்டையன்' படத்தில் தன் கதாபாத்திரம் குறித்தும், ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்தும் பேசியுள்ளார். இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் "வேட்டையன் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் 'தரண்', இந்த கதாபாத்திரம் உங்கள் அனைவரும் மிகவும் பிடிக்கும். சமூக வலைத்தளத்தில் உள்ள நுணுக்கங்களை சிறப்பாக கையாளக்கூடிய கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். மேலும் ரஜினியுடன் சேர்ந்து நடனமாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை, ஆனால் அவருடன் என்னை நடனமாட வைத்த டான்ஸ் மாஸ்டர் தினேஷ் அவர்களுக்கு பெரிய நன்றி" என்று ரக்சன் கூறியுள்ளார்.

Step behind the scenes with @RakshanVJ in the making of VETTAIYAN ️ from Script to Screen. #Vettaiyan ️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaranpic.twitter.com/XJCBhF2ffQ

— Lyca Productions (@LycaProductions) October 8, 2024
Read Entire Article