ரஜினியின் மனைவி வேடத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மோசடி..நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

5 hours ago 1

சென்னை,

'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் அறிமுகமான நடிகை ஷைனி சாரா, தமிழ் படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக ஒருவர் கூறி ஏமாற்ற முயன்றதாக குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"ஒரு நாள் எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஒருவர், ரஜினிகாந்தின் மனைவி வேடத்தில் நடிக்க என்னை தேர்வு செய்துள்ளதாகவும், நடிகர் சங்க உறுப்பினர் கார்டு, ஆதார் கார்டு அனைத்தின் நகல்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்பி வையுங்கள் என்றும் கூறினார்.

மலையாளத்தில் அப்படி ஒரு அட்டை கிடையாது என்று சொன்னதும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறி, அதற்காக 12,500 ரூபாய் தருமாறு கேட்டார். அந்தநபர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் இரண்டு நாட்கள் கழித்து பணம் தருகிறேன் என்று கூறினேன்.

முதல் தவணையையாவது உடனே செலுத்த வேண்டும் என்றார். இதனால் எனக்கு சந்தேகம் அதிகரித்தது. எனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள, சக சினிமா நட்பு வட்டாரம் மூலமாக இது குறித்து விசாரித்தபோது அப்படி எல்லாம் ரஜினிக்கு ஜோடியாக எந்த தேர்வும் நடக்கவில்லை. மேலும், நடிப்பதற்கு நடிகர் சங்க உறுப்பினர் அட்டை இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை என்றும் கூறினார்கள். உடனே அந்த நபருக்கு கால் செய்து இது பற்றி கூறியபோது, அழைப்பை துண்டித்துவிட்டார். இதுபோன்று பலரும் ஏமாற்றப்பட்டிருக்கலாம். மக்கள் கவனமாக இருக்க வேண்டும்," என்றார்.

Read Entire Article